கானல் நீராய்  தெரியும்  தெய்வங்கள்

ஆயி
மாயி ஆகி
மம்மி ஆனாள்
காடுகாள்
வனஜா ஆகிவிட்டாள்
கொற்றவை
மானை துரத்தியபோதும் என்று
எருமையை வீழ்த்தி
துர்க்கையானாள்
 வள்ளி  வறுமையில்
கிழங்கு தோண்டுகிறாள்
பச்சையம்மன் தோட்டத்தில்

கன்னிமார்கள்
ஆற்றில் கட்டிய அணை
எங்கே என்று
மகளிர்குழுக்களுடன்
மனு அளித்து வருகிறார்கள்

முருகன் கையில் உள்ளது
 வேலா
வில்லா
தமிழிலும் பட்டிமன்றம்

அவ்வை
அறம் செய்ய விரும்பு
பட்டிமன்ற பேச்சாளர்க்கு
 சுட்டபழத்துடன் விளக்கம்

 தமிழ்குமரா
தென்னாடுடைய சிவன்தகப்பன்
தாட்சாயினை தாய் என்றார்கள்
 இந்து நீ
என்கிறார்கள்
வள்ளியை சாதி  மறுப்பு திருமணம்
செய்வதற்காக
 ஆணவகொலை செய்யதுடிக்கின்றார்கள்
மாம்பழம் வேண்டாம்
பழனிக்கு வா
மச்சக்காவடியுடன்
பக்தர்கள்
குறிஞ்சி செய்தி

மாயோன்
மாடுமேய்க்கின்றான்
ஏறுதழுவுகின்றான்
நாங்களும்
தயிர் சோறுதான்
எங்களுக்கு கிரிக்கெட்
நோக்கு தெரியுமோ
அவாதான் எங்க
முப்பாட்டன்.
 வடகலையா தென்கலையா
இராமா கோயிந்தா

மருத வயல்களில்
மாரியாய்
கூழ்கேட்கிறாள்
நூறுநாள் வேலையை இழந்து


அன்ன அபிஷேகம்
என்னிடம்
சக்தியாய் இரு
ஆதிசிவன் அவளுக்கு அழைப்பு


கடலில் இருந்து வள்ளுவரை
கரைக்கு அழைப்பு
குறள் வழிகாட்டு என்று
குமரி
பெண்கல்விஅலை எழுப்பி

கொற்றவையை ஆனாலும்
குடியரசு தலைவர் ஆனலும்
பழங்குடிக்கு
கோவிலுனுள்
அனுமதியில்லை
இராமராஜ்ஜியத்தில்

அகழ்வாராய்ச்சியில்
புத்தர்
காட்சிப்பிழை

பெருவழி வணிகர்களின்
பாழி, பள்ளிகள்
அழிப்பு
அறச்சீற்றமா
மூக்கறுப்பு
கழுத்தறுப்பு
சமஸ்கிருதம் மட்டுமே
இருப்பு

அனல் வாதம்
புனல் வாதம்
 சமணர்படுகொலை
வரலாறு
எண்ணாயிரம், எண்ணாயிரம்

புதிய கண்ணகி
புதியமாதவி
இலக்கியம் தேட
மணிமேகலை அன்னமிட்டாள்

இசையாட்டத்தில்
காரைக்காலம்மையார்
பேயாகிப்போனாள்

சூடிக்கொடுத்த சுடர் மாலை
வாடுவதற்குள்
வதங்கிவிட்டாள் கோதை

அவரை ஓடத் தொடர்ந்து
துரத்தற்பின்
பின்னும்பாழிப்பள்ளிபறித்து
பெரியபுராணம்
பக்தி இயக்கத்தையும்
பாபர்மசூதி இடிப்பையும் காட்டியது

வாலி வதம்
செய்தியோடு
இராமன் விஜயம்
அனுமன் அடிமைஉதயம்

சுக்ரீவன்
விபீடன்
இராமகாதையில்
பொம்மை அரசாங்கம்
ஆளுநர்களுக்கு புத்தெழுச்சி

மதுரைவீரன்களும்
காத்தவராயன்களும்
கண்ணகிமுருகேசன்
 இளவரசனுடன்
நடுகல் தெய்வமாகின்றார்கள்
காட்டேரி
சுமைதாங்கி கல்லில்
அமர்ந்து கணக்கு தீர்க்க பார்க்கின்றாள்

 இராமர் இராஜ்ஜியம் ஆனாலும்
தர்மர் பட்டாபிஷேகம் கண்டாலும்

திரெளபதி
கோயில் நுழைவு
நடந்தே தீரும்
காண்டீபம் கைவிடு
கரங்கொடு
சமத்துவதற்கு

கம்பன் கலங்குகின்றான்
சடையப்ப வள்ளலிடம்
இராமனை தமிழ்படுத்தினேன்
ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என்று
தமிழனை சங்கியாக்குகின்றனர்

குதிரைலாடமா
என் குடியிருப்பு
அய்யனார் பொங்குகிறார்

அரிவாளை
எங்ககையில் கொடுங்கடா
அட்டைக்கத்தியை
கீழே போட்டு
சுடலைமாடனும்
கருப்பசாமியும்
 ஊர் பஞ்சாயத்தில்
உரிமைகோரல்

டாஸ்மாக் சரக்கு
தரமில்லை
பனையேறி
கள் இறக்கு
வீரன் உத்தரவு

ஆடு, கோழி
எங்கே
அங்காளம்மன் ஆவேசம்
கருவாட்டு குழம்பு தானா

பிள்ளையார் ஊர்வலம்
டிஸ்கோ நடனனாடிய
இளைஞர்கள்
கோட்சே தாக்குதல்

பிள்ளைகறி அமுது
சமைக்கலாம்
மாட்டுக்கறிவிரும்புவரை
தாக்கலாம்

நந்தனை தடுக்கலாம்
வள்ளலாரை எரிக்கலாம்
இனி
பெரியாரை வெறுக்கலாம்
தமிழரை அழிக்கலாம்
 வரலாறு தொடரலாம்
எண்ணாதீர்
எச்சரிக்கை
எங்கள் மொழியே ஆயுதம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்
யாம் யார்க்கும் குடியல்லோம் யமதுஅஞ்சோம்
















































Comments

Popular posts from this blog