Posts

 பேராசிரியர் கல்யாணி அவர்கள் விழுப்புரம் , திண்டிவனம் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெளதிகத்துறை பேராசியராக பணிபுரிந்த இவர் பணத்திற்காக மாணவர்களுக்கு தனிப்பயிற்சிவகுப்புகள் நடத்துவதை  எதிர்ப்பைஇயக்கமாக  முன்னெடுத்துமாணவர்கள் பெற்றோர்களின் ஆதரவை பெற்றவர்..இலவசபயிற்சி வகுப்புகளைஎழை எளியமக்களின் கல்வி வளர்ச்சிக்கும் கல்லூரி பேராசிரியர்களின் சமூக பங்களிப்புக்கும் வாய்ப்புகளை உருவாக்கியவர். இதனால் உயர்கல்விதுறையில் எதிரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குகளை சந்தித்து ஜனநாய சக்திகள் ஆதரவைப்பெற்றார் திண்டிவனம் நகரில் முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி உருவாக்கத்திலும் திண்டிவனம் ரோசணை தாய்தமிழ்ப்பள்ளிவெற்றியிலும் அடையாளமானவர்.. 1980 களில் ஏற்பட்ட மாணவர்களின் விழுப்புணர்வுக்கு நெம்புகோலாய் இருந்துபடைப்பாளிகளை கலை இலக்கிய பணிகளில்உருவாக்கியவர்.. இடது சாரி, தாய்மொழி கல்வி உரிமை, மக்கள் உரிமை பணிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னோடியாக இருப்பவர். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் நிறுவி அவர்களின் வாழ்வுரிமை,கல்விஉரிமை, சட்ட உரிமை பணிகளைமேற்கொண்டு தமிழகத்தின் அவர்க...
கானல் நீராய்  தெரியும்  தெய்வங்கள் ஆயி மாயி ஆகி மம்மி ஆனாள் காடுகாள் வனஜா ஆகிவிட்டாள் கொற்றவை மானை துரத்தியபோதும் என்று எருமையை வீழ்த்தி துர்க்கையானாள்  வள்ளி  வறுமையில் கிழங்கு தோண்டுகிறாள் பச்சையம்மன் தோட்டத்தில் கன்னிமார்கள் ஆற்றில் கட்டிய அணை எங்கே என்று மகளிர்குழுக்களுடன் மனு அளித்து வருகிறார்கள் முருகன் கையில் உள்ளது  வேலா வில்லா தமிழிலும் பட்டிமன்றம் அவ்வை அறம் செய்ய விரும்பு பட்டிமன்ற பேச்சாளர்க்கு  சுட்டபழத்துடன் விளக்கம்  தமிழ்குமரா தென்னாடுடைய சிவன்தகப்பன் தாட்சாயினை தாய் என்றார்கள்  இந்து நீ என்கிறார்கள் வள்ளியை சாதி  மறுப்பு திருமணம் செய்வதற்காக  ஆணவகொலை செய்யதுடிக்கின்றார்கள் மாம்பழம் வேண்டாம் பழனிக்கு வா மச்சக்காவடியுடன் பக்தர்கள் குறிஞ்சி செய்தி மாயோன் மாடுமேய்க்கின்றான் ஏறுதழுவுகின்றான் நாங்களும் தயிர் சோறுதான் எங்களுக்கு கிரிக்கெட் நோக்கு தெரியுமோ அவாதான் எங்க முப்பாட்டன்.  வடகலையா தென்கலையா இராமா கோயிந்தா மருத வயல்களில் மாரியாய் கூழ்கேட்கிறாள் நூறுநாள் வேலையை இழந்து அன்ன அபிஷேகம் என்னிடம் சக்தியாய் இரு ஆதிசிவன் அவ...
தென்பெண்ணையின் பண்பாட்டு ஈரம்- ஆ.இரவிகார்த்திகேயன்  அகப்பாடல்(25)                      முழவின் ஒலி இடைவிடாது ஒலிக்கும் திருக்கோயிலூர்க்குத் தலைவனாகிய நீண்ட தோளினையுடைய  காரியின் கொடுங்கால் என்னும்   ஊரின் அழகிய பெரிய பெண்ணையாற்றின் முன் துறையில் உள்ள   நுண்ணிய கருமணலை ஒத்த  கூந்தலையுடைய என்மகளை அறியார் யாருமில்லாத நாட்டின்கண் அவள் துணைவன் அழைத்து சென்றனன் என்ற பாடலை குடவாயிற்கீரத்தனார்..பாடியுள்ள பாடல்  பெண்ணையாறு. ஈரமான தன் மணலோடு. தான் அதன் கரையோரமக்களால் காலம் காலமாக போற்றப்படுகின்றது என்பதை தான் சங்க இலக்கிய சான்றுகளோடு பண்பாட்டின் தொன்மையை சுட்டிகாட்ட  இப்பாடலை காண்கிறோம்  பெண்ணை என்றால்  பனை என்று பொருள் கூறுவர்.வேரில் நீர் நிரப்பி கோடை வெயிலை தாங்கும் நீண்டு உயரும்பனைமரம் போல் மணலில் ஊற்றுகண்ணாய் மணலுக்குள் நீரைதேக்கி கோடையிலும் காக்கும்இயல்பு பெண்ணையாற்றின் சிறப்பு. மலையமான் தந்த பரிசுகளை மண்ணுக்குள் ஒளித்த பெண்ணையாற்றின் ஊற்றுக்குள் கைவிட்டுக் குழந்தைகள் தேடுவர்  எ...