Posts

Showing posts from December, 2023
தென்பெண்ணையின் பண்பாட்டு ஈரம்- ஆ.இரவிகார்த்திகேயன்  அகப்பாடல்(25)                      முழவின் ஒலி இடைவிடாது ஒலிக்கும் திருக்கோயிலூர்க்குத் தலைவனாகிய நீண்ட தோளினையுடைய  காரியின் கொடுங்கால் என்னும்   ஊரின் அழகிய பெரிய பெண்ணையாற்றின் முன் துறையில் உள்ள   நுண்ணிய கருமணலை ஒத்த  கூந்தலையுடைய என்மகளை அறியார் யாருமில்லாத நாட்டின்கண் அவள் துணைவன் அழைத்து சென்றனன் என்ற பாடலை குடவாயிற்கீரத்தனார்..பாடியுள்ள பாடல்  பெண்ணையாறு. ஈரமான தன் மணலோடு. தான் அதன் கரையோரமக்களால் காலம் காலமாக போற்றப்படுகின்றது என்பதை தான் சங்க இலக்கிய சான்றுகளோடு பண்பாட்டின் தொன்மையை சுட்டிகாட்ட  இப்பாடலை காண்கிறோம்  பெண்ணை என்றால்  பனை என்று பொருள் கூறுவர்.வேரில் நீர் நிரப்பி கோடை வெயிலை தாங்கும் நீண்டு உயரும்பனைமரம் போல் மணலில் ஊற்றுகண்ணாய் மணலுக்குள் நீரைதேக்கி கோடையிலும் காக்கும்இயல்பு பெண்ணையாற்றின் சிறப்பு. மலையமான் தந்த பரிசுகளை மண்ணுக்குள் ஒளித்த பெண்ணையாற்றின் ஊற்றுக்குள் கைவிட்டுக் குழந்தைகள் தேடுவர்  எ...